2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இருவேறு விபத்துக்களில் முதியவர்கள் இருவர் காயம்

George   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, ற.றஜீவன்

யாழில் இரு வேறு இடங்களில் திங்கட்கிழமை(06) இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த இரண்டு முதியவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொடிகாமம் புத்தூர் சந்தியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது தனியார் பேருந்து மோதியுள்ளது.

இந்தவிபத்தில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த தம்பமுத்து தர்மலிங்கம் (வயது 77) என்பவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பருத்தித்துறை மெத்தைக்கடை சந்தியில் பஸ்ஸில் இருந்த இறங்கிய மூதாட்டியொருவர் தவறி வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பளையை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை அன்னலட்சுமி (வயது 68) என்ற மூதாட்டியே படுகாயமடைந்தார்.

மூதாட்டி பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு முன்னர், பஸ்ஸை சாரதி செலுத்த முற்பட்டதிலேயே மூதாட்டி கீழே வீழ்ந்து காயமடைந்து, முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .