2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தை எதிர்த்து போராட்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யோ.வித்தியா


யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், திங்கட்கிழமை (06) நடத்திய போராட்டத்துக்கு எதிரான போராட்டமொன்று அதே தருணத்தில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 15 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய போராட்டம் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதன்போது, அங்கு சில பதாகைகளுடன் வந்த நால்வர் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்துக்;கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர்கள் ஆசிரியர்களை நடு வழியில் கைவிட்டுவிடுவார்கள், வேண்டாம் வேண்டாம் ஆசிரியர்களை ஏமாற்ற வேண்டாம், ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் அவர்களை வீதியில் இறக்கி அல்லல்படுத்தாதீர்கள. போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைககளை கைகளில் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தும், எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .