2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் உப புகையிரத நிலையம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

கிளிநொச்சியில் உப புகையிரத நிலையம் அமைப்பதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

 யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய, பொறியியல் பீடங்கள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதியே கிளிநொச்சி அறிவியல் கல்லூரிக்கு அருகில் அமைக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இவ் உப புகையிரத நிலையம், கிளிநொச்சி மற்றும் முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கான கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .