2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆடைகளில் ஒழுங்கை கடைப்பிடியுங்கள் - சி.வி.கே

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் ஆடை தொடர்பிலான விடயங்களில் ஒழுங்கை கடைப்பிடிக்கும்படி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணி தொடர்பிலான விசேட வடமாகாண சபை அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

அமர்வை ஆரம்பித்து வைக்கும் போதே அவைத்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

104 உறுப்பினர்களை கொண்ட மேல் மாகாண சபையிலுள்ள உறுப்பினர்கள், அமர்வுகள் இடம்பெறுகின்ற போது, ஒரே மாதிரியான ஒழுங்கான ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.

ஆனால் எங்கள் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள வரும் உறுப்பினர்கள், வௌ;வேறு விதமான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணியவேண்டியது கட்டாயமாகும். எமது வடமாகாண சபை 25 வருடங்கள் பின்நோக்கிய நிலையில் இருக்கின்றது. இதனை முன்னேற்ற வேண்டியது எமது கடமையாகும். அத்துடன், சபை ஒழுங்குகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது, உறுப்பினர்களை பேச அனுமதியளிக்கும் கால எல்லைக்குள் மாத்திரம் பேச வேண்டும், குறுக்காக பேசக்கூடாது, குழப்பங்களை சபைகளில் ஏற்படுத்தக்கூடாது. மேல் மாகாண சபையில் இத்தகைய ஒழுங்குகள் சீராக பேணப்பட்டு வருவதாக அவைத்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .