2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வருட இறுதிக்குள் முப்படையும் வெளியேற வேண்டும்; வட மாகாண சபையில் தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

வடக்கில் அரச மற்றும் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள முப்படைகளும் இந்த வருட இறுதிக்குள் வடக்கிலிருந்து வெளியேறவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம், வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (09) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவும் தெரிவிக்காமல், மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாணத்தில் தனியார்களின் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ள தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், 13 பிளஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபையின் கீழுள்ள காணிகள் தொடர்பிலான அதிகாரத்தை வடமாகாண சபைக்கு கீழ் வழங்குவதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .