2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தனியார் துறையை தபால் திணைக்களம் மிஞ்சிவிட்டது: சேனாதீர

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


தபால் சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதில் கடந்த காலங்களில் தனியார் துறை மற்றும் அரச மற்றைய துறைகளை விட தபால் திணைக்களம் மிஞ்சி நிற்கின்றதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிகர் கே.ஏ.எஸ்.சேனாதீர கூறினார்.

140 ஆவது உலக அஞ்சல் அஞ்சல் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (09) காலை, மாலை நிகழ்வுகளாக கொண்டாடப்பட்டன.

காலை நிகழ்வு யாழ்.தபால் திணைக்கள அலுவலத்திலும் மாலை நிகழ்வுகள் நாச்சிமார் கோவிலடியிலுள்ள மண்டபம் ஒன்றிலும் இடம்பெற்றன. மாலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தபால் திணைக்களம் பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றது. கடந்த வந்த பாதையில் பல மேம்பாடுகளை தபால் திணைக்களம் அடைந்துள்ளதை காணமுடிகின்றது.

தபால் தினத்தை நாட்டில் எல்லா இடங்களிலும் வருடா வருடம் நடத்தி வருகின்றோம். இம்முறை விசேடமாக யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றோம். தபால் திணைக்களம் 2014ஆம் ஆண்டு பூரண பரிணான வளர்ச்சியை கண்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் 10 ரூபாய் முத்திரையொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன், 43 நாடுகளின் தகவல் திணைக்களங்களுக்கிடையில் இலங்கை இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டதிற்கான விருதும் இந்நிகழ்வில் வைத்து காண்பிக்கப்பட்டது.

அத்துடன், வங்கிகளில் வைப்புக்களில் முன்னிலை வகிக்கின்ற தபாலகங்கள் மற்றும் அதிகமான காப்புறுதிகளை பேணிய தபாலகங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், அஞ்சல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .