2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அசைவ உணவு இல்லையென சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவர்கள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றிருந்து தப்பிச்சென்ற சிறுவர்கள் மூவரையும், மீண்டும் அந்த சிறுவர் இல்லத்திலேயே சேர்க்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார்.

மேற்படி சிறுவர் இல்லத்தை சேர்ந்த 08, 09, 11 வயதுடைய சிறுவர்கள் மூவர், சிறுவர் இல்லத்தின் மதில் பாய்ந்து கடந்த புதன்கிழமை (08) தப்பி ஓடியிருந்தனர்.

உரும்பிராய் பகுதியிலுள்ள வீதியில் இச்சிறுவர்கள் அலைந்து திரிவதை அவதானித்த பொதுமக்கள், அவர்களை பிடித்து வியாழக்கிழமை (09) இரவு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த இல்லத்தில் தங்களுக்கு அசைவ உணவு தரவில்லையென்ற காரணத்தால் அங்கிருந்து தப்பித்ததாக கூறினர்.

இதனையடுத்து, பொலிஸார்  மூன்று சிறுவர்களையும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

You May Also Like

  Comments - 0

  • Sivanoo Saturday, 11 October 2014 02:39 AM

    Please provide contact number and address I can help to get non vegetable food to them

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .