2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கைகலப்பில் ஒருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.சுன்னாகம் மேற்கு பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (09) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழம (10) கூறினர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த 26 வயதான சந்திரசேகரம் வித்தியரூபன் என்பவரே படுகாயமடைந்தார்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்களுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கம் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .