2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடைகள் தீக்கிரை

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். கொடிகாமம் சந்தைக்குள் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

புடவை வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் பாய்கள் விற்பனை செய்யும் கடைகள் என்பனவே தீயால் எரிந்துள்ளன.

இவ்வனர்த்தத்தால் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லையெனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .