2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மக்களுக்கான சேவைகள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும்: டக்ளஸ்

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


மக்களுக்கான சேவைகள் இனங்காணப்படும் அதேவேளை, அவற்றை உரிய காலத்தில் கிடைப்பதற்கும் உத்தியோகத்தர்கள் உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (10) தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வாழ்வின் எழுச்சி திட்ட மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பெறப்படுகின்ற நிதிகள் உரியமுறையில் பயன்படுத்தப்படல் வேண்டும்.

இவ்வாறான உதவித் திட்டங்கள் அனைத்தும் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாகவும் மக்கள் பயன்பெறும் வகையிலும் கிடைக்கப் பெறுவதை உத்தியோகத்தர்கள் உறுதிசெய்தலும் அவசியமானதாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறிப்பாக வடபகுதி அரசினதும் ஏனைய உதவித் திட்டங்களின் ஊடாகவும் அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இந்நிலையில், அபிவிருத்திகள் மேலும் தொடர்வதற்கு மக்கள் சரியான பாதைகளை தெரிந்து கொண்ட அதன்படி நடக்க வேண்டுமென்பதுடன் அதற்கு வழிகாட்டிகளாகவும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், வாழ்வின் எழுச்சி திட்ட யாழ். மாவட்ட பணிப்பாளர் ரகுநாதன், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி  யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .