2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடைகள் தீக்கிரை: இருவர் கைது

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். கொடிகாமம் சந்தைப்பகுதியில் 3 கடைகள் தீக்கிரையானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை சனிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தையில் அமைந்திருந்த     புடவை வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் பாய்கள் விற்பனை செய்யும் கடைகள் சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகின.

இதனால் 10 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையான பொருட்கள் அழிவடைந்தன.

இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளையில் தொழில் போட்டி காரணமாக, கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0

  • IBNUABOO Saturday, 11 October 2014 11:32 PM

    இது பொறாமைத் தீ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .