2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சமாதான நீதவான் மீது கொலை முயற்சி

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். கற்கோவளம் பகுதியை சேர்ந்த சமாதான நீதவான் சதானந்தன் கேசவனானந்தம் (வயது 64) என்பவர் மீது சனிக்கிழமை (11) மாலை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் முறைப்பாடு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லிபுர ஆலயத்திலிருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த சமாதான நீதவான் மீது, புலோலி ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து இனம்தெரியாத கும்பலொன்று வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து வாளொன்றினால் அவரை தாக்கமுற்பட்ட வேளை, வான் ஒன்று அவ்வீதியில் வந்ததை கண்டு குறித்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது.

வானில் வந்தவர்கள் சமாதான நீதவானை மீட்டு, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .