2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழ் - கொழும்பு கட்டண விபரங்கள் இன்று

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கொழும்பு வரையான ரயில் சேவைக் கட்டண விபரங்கள், இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறும். அதன் பிறகே கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என்று யாழ். ரயில் நிலைய வர்த்தக அத்தியட்சகர் தெரிவித்தார்.

தற்போதைய உறுதிப்படுத்தப்படாத கட்டண விபரங்களின் அடிப்படையில், தபால் மற்றும் யாழ்தேவி ரயில்களின் சாதாரண வகைகளுக்கு 500 ரூபாவும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலுக்கு 1,500 ரூபாவும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் - கொழும்பு – யாழ் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு அமையவே ரயில் கட்டணங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

எனினும், உறுதியான கட்டண விபரங்கள் செவ்வாய்க்கிழமை (14) கிடைக்கப்பெறும் என ரயில் வர்த்தக அத்தியட்சகர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .