2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ்தேவிக்கான முன்பதிவுகள் செயலிழப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப இணைப்பிலுள்ள பிரச்சினையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில் முன்பதிவு நடவடிக்கைகள், செயலிழந்துள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

யாழிலிருந்து கொழும்பிற்கு இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை, முதலாவது புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அந்த ரயிலில் பயணத்தை மேற்கொள்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்ய யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு சென்றவேளை முற்பதிவு நடவடிக்கைகள் இன்னமும் செயற்படத் தொடங்கவில்லையென அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் அங்கு நின்றிருந்த புகையிரத நிலைய அலுவலரிடம் கேட்டபோது, தமது முறைமைகளை செயற்படுவதற்கான தொழில்நுட்ப இணைப்புக்கள் இணைக்கப்படாததால் முன்பதிவு பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், பளை ரயில் நிலையத்திலும் முற்பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், இன்று மாலை பயணமாகும் ரயிலில் பயணம் செய்வோர், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ரயில் நிலையம் வந்து உடனடியாக கட்டணம் செலுத்தி பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று அவ்வலுவலர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .