2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கரவெட்டி பிரதேசத்தில் கால்வாய் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

George   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தில் பரவிய கால்வாய் நோய் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கரவெட்டி பிரதேச கால்நடை வைத்தியதிகாரி சகுந்தலா மகேந்திரராசா, புதன்கிழமை(15) தெரிவித்தார்.

இதேவேளை, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கடந்த 10ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தில் உள்ள கிளான், குடவத்தை, துன்னாலை கிழக்கு, துன்னாலை தெற்கு, கப்புது ஆகிய பிரதேசங்களிலுள்ள மாடுகளுக்கு கடந்த ஜுலை மாதம் முதல் கால்வாய் நோய் தாக்கம் ஏற்பட்டது.

இதனால் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் பால் சேகரித்தல், கால்நடைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லல், எரு சேகரித்தல், இறைச்சிக்காக வெட்டப்படுதல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கால்நடை வைத்தியதிகாரி பணிமனையால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, நோய்த்தாக்கம் பிரதேசத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், மாடு சம்பந்தமான அனைத்து செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளதுடன், இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .