2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மகளை தாக்கிய தந்தை கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கு, கட்டைவேலி பகுதியில் மகளை பொல்லால் தாக்கிய தந்தையை புதன்கிழஇமை (15) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட நபர், மதுபோதையில் புதன்கிழமை (15) காலை வீட்டுக்கு வந்து, தனது 15 வயது மகளை பொல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், தந்தையான சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேகநபரை வியாழக்கிழமை (16) யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .