2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கைதிகளின் விடுதலை கோரி தபாலட்டை போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு 1 இலட்சம் தபாலட்டைகளை அனுப்பும் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த், வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி எமது கட்சியால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது போராட்டம் இதுவாகும். முன்னதாக கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றை மேற்கொண்டிருந்தோம்.

தற்போது, தபாலட்டை அனுப்பும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இந்த தபாலட்டை அனுப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றிற்கும் அழைப்பு விடுகின்றோம்.

நாங்கள் முன்னெடுத்த போராட்;டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அலட்சியமாக இருந்து வருகின்றார்.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த போது, சலுகைகள் தொடர்பிலான விடயங்களிலே அக்கறை செலுத்தியிருந்தார். கட்டிடங்கள், அலுவலகங்கள் திறப்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார்.

மாறாக மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம் மற்றும் அரசியற் கைதிகள் விடுதலைகள் தொடர்பான விடயங்களில் அவர் அக்கறை செலுத்தவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .