2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அதிகளவான விதை நெல் சுத்திகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முரசுமோட்டை விவசாய கம்பனியில் அமைக்கப்பட்டுள்ள நெல் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக இதுவரையில் 1 இலட்சத்து 36 ஆயிரம் கிலோ விதை நெல் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய உற்பத்தியாளர் சங்க தலைவர் சிதம்பரநாதன் சுதர்ஷன் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'அறுவடை செய்யும் நெல்லை மீண்டும் விதைக்கும் முன்னர், அதனை சுத்திகரிக்கும் நோக்கில் நெல் சுத்திகரிப்பு இயந்திரம் முரசுமோட்டை விவசாய கம்பனியில் இவ்வருடம் ஜூலை மாதம் நிறுவப்பட்டது.

நிறுவப்பட்டு இன்று வரையில் மேற்படி தொகையான நெல் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. நெல்லை சுத்திரித்து விதைக்கும் போது விதைக்க வேண்டிய விதை நெல்லின் தேவை குறைவாகவே இருக்கும்.
அதாவது, சுத்திகரிக்கப்பட்ட விதை நெல் என்றால் ஒரு ஏக்கரிற்கு 60 கிலோ விதை நெல் விதைக்க வேண்டும்.

மாறாக சுத்திகரிக்கப்படாத விதை நெல் என்றால் ஒரு ஏக்கருக்கு 60 தொடக்கம் 80 கிலோ வரையில் விதை நெல் விதைக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .