2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மூன்று சிறுவர் துஷ்பிரயோகங்கள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 3 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இருந்தும் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

வசாவிளான் குட்டிப்புலம் பகுதியில் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை அதிகாரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வல்வெட்டித்துறை பகுதியில் 13 வயதுச்சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .