2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ் - கொழும்பு கடுகதி ரயிலில் இருக்கை தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்கு அதிகளவானவர்கள் முன்வருவதால் அந்த ரயிலில் இருக்கை  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலுக்கான முற்பதிவுகள், மொபிட்டல் தொலைபேசி வலைப்பினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் இருக்கைகள் அனைத்தும் முன்பாகவே முற்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

இந்நிலையில், முற்பதிவுகளை மேற்கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் பயணிப்பதற்காக யாழ். புகையிரத நிலையத்துக்கு வருபவர்கள், இருக்கைகள் இன்மையால் தினமும் 250பேர் வரையிலானோர் திரும்பிச் செல்கின்றனர் என்று அவர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ஏனைய ரயில்களில் முற்பதிவுகளை மேற்கொள்வதற்கான முற்பதிவு முறைமைகள் இன்னமும் சீராக இயங்கத் தொடங்கவில்லை.

இதனால், முற்பதிவு செய்ய வருபவர்களை காத்திருக்க வைக்கவேண்டிய அதேவேளை, முற்பதிவுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .