2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். சாலையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன: எஸ்.குலபாலசெல்வம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். பஸ் சாலைக்கு வழங்கப்பட்ட 10 புதிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். பஸ் சாலைக்கு 10 பஸ்களை வழங்கியிருந்தார்.

10 பஸ்களில் பழைய பஸ்களுக்கு பதிலாக அதாவது யாழ்ப்பாணம் கொழும்புக்கு 2உம், யாழ்ப்பாணம் கண்டிக்கு 2உம் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், புதிய சேவையாக குறிகட்டுவான் - கொழும்புக்கு 2 பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன், ஏற்கனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள திருகோணமலை - யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - விடத்தல்பளை, யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் ஆகிய இடங்களிற்கு மேலதிகமாக தலா 1 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .