2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சமூகத்தை நல்வழிப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களை பாதுகாத்து நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நாவாந்துறை சென்.மேரிஷ் சனசமூக நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஹரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜோசப் பாலா, மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.செந்தூர் செல்வன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை உளவளத் துணையாளர் அ.எட்வின் றோஜர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.

நாவாந்துறை பிரதேசத்தில் நிகழும் மது, போதை வஸ்து பாவனை மற்றும் குற்றச் சம்பவங்களை குறைத்து, அவற்றிலிருந்து மக்களை பாதுகாத்து மக்களின் வாழ்வை மீட்சி பெற செய்யவேண்டும் என இந்தக்கலந்துரையாடலில் கூறப்பட்டது.

அத்துடன், நாவாந்துறை பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க வேண்டும் எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதன்போது, பலகாரங்களுடன் இணைத்து மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் நடவடிக்கை இப்பிரதேசத்தில் அதிகமாக இடம்;பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மதுபோதை, மற்றும் போதைவஸ்து எதிர்ப்பு பிரசாரம் எதிர்வரும் 24ஆம் திகதி நாவாந்துறை பொது சந்தையில் பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தவுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .