2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்;ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடந்த 20ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது கணவன் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர்.

கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி, வீட்டிலிருந்து புறப்பட்ட மனைவி பருத்தித்துறையிலுள்ள நண்பி வீட்டுக்குச் சென்று வருவதாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .