2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முதியோருக்கு கண்வில்லைகள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகம், 60 வயதுக்கு  மேற்பட்ட முதியோர்களுக்கு கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 60 வயதை அடைந்த கண்வில்லை தேவைப்படும் முதியவர்கள், கண் வைத்தியரின் மருத்துவ அறிக்கையை பெற்று, தமது பிரதேச செயலகத்திலுள்ள முதியோர் மேம்பாட்டு அலுவலர் அல்லது சமூக சேவைகள் அலுவலரை தொடர்புகொண்டு இந்த இலவச கண் வில்லைக்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்வில்லைகள்,  முதியோர் தேசிய செயலகத்தால் வழங்கப்படும்.

வறிய முதியோரின் உதவும் திட்டத்தின் கீழ், சமூக சேவைகள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .