2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாய்மாருக்கு புற்றுநோய் பரிசோதனை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினரசா

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட தாய்மார்களுக்கு புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள், வைத்தியதிகாரி பணிமனையால் கடந்த சனிக்கிழமை (25) முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

இந்த பரிசோதனையில் கழுத்து, வாய், இரைப்பை மற்றும் மார்பு புற்று நோய்க்கான மருத்துவ பரிசோதனைகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டு வாரங்களில் ஒரு சனிக்கிழமை என்றவாறு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இடம்பெறும் இந்த வைத்திய பரிசோதனையை, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்;தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் திருமதி இ.கிரிசாந்தி, மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.முகுந்தன் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

முதன்முதலாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் 15 தாய்மார்கள் பயன்பெற்றார்கள்.

தொடர்ந்து, நவம்பர் 8ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள மருத்துவ பரிசோதனையில் பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் தாய்மார்கள் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் முற்பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .