2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பொருட் கொள்வனவுக்காக 1000 ரூபாய் நாணயத்தாளை வழங்கிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்தேகநபர் ஹோட்டலில் பொருட்களை வாங்கிவிட்டு 1000 ரூபாய் போலி நாணயத்தாளை வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் வழங்கியது போலி நாணயத்தாள் என்பதை உணர்ந்த ஹோட்டலின் காசாளர் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

மேற்படி சந்தேகநபரிடம் வேறு போலி நாணயத்தாள்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .