2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனை செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குருநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் சனிக்கிழமை (01) உத்தரவிட்டார்.

குருநகர் பூங்கா வீதியை சேர்ந்த மேற்படி பெண் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றார் என, யாழ். பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (31) குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடமிருந்து 3.900 மில்லிகிராம் கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, மேற்படி பெண் நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (01) மாலை ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பி;க்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .