2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுயதொழில் முயற்சிகளை மதிப்பீடு செய்ய நடவடிக்கை

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக சேவைகள் அமைச்சு, அங்கவீனமுற்றோர் தேசிய செயலகத்தினூடாக வழங்கப்பட்ட சுயதொழில் கொடுப்பனவுகளை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகங்களுடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.

சுயதொழில் கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 25 ஆயிரம் ரூபாய் வரை பயளாளிகளுக்கு அமைச்சின் செயலகம்  வழங்கியுள்ளது.
இச்சுயதொழில் கொடுப்பனவுகளை கொண்டு பயனாளிகள், கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், விவசாயம், சிறுகடை ஆகிய சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள சுயதொழில் முயற்சிகளை மதிப்பீடு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியை அனுப்பி வைத்துள்ளது.

பிரதேச செயலகங்களிலுள்ள சமூக சேவைகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள், சுயதொழில் கொடுப்பனவுகள் மூலம் சிறந்த வெற்றியை அடைந்த பயனாளிகளின் சுயதொழில் செயற்பாடுகளை வீடியோ பதிவு செய்து அதனை அமைச்சிற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இந்நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .