2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியிலில்

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி பொருள் கொள்வனவில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டுள்ளதாக, என அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தனர்.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை (31) அச்சுவேலியிலுள்ள கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ததன் பின், 1,000 ரூபாய் நாணயத்தாளை கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.

சந்தேகநபர் வழங்கிய தாள் போலியென்பதை கண்டறிந்த கடைக்காரர் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அண்மையில் 1,000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற  கீழ், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், 1,000 ரூபாய் பெறுமதியான 4 போலி நாணயதாள்கள், நெல்லியடியிலுள்ள வங்கியொன்றில் தனக்கு வழங்கப்பட்டதாக நெல்லியடி வாசியொருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .