2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குழு மோதலுக்கு தயாரான ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்

யாழ். சிவன் அம்மன் கோவில் வீதியில் குழு மோதலுக்கு தயாரான நிலையில் நின்றிருந்த 5 இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் திங்கட்கிழமை (03) தெரிவித்தனர்.

மேற்படி வீதியில் சத்தமிட்டவாறு இவர்கள் குழு மோதலுக்கு தயாரான நிலையில் நின்றுள்ளனர். இதை  அவதானித்த அப்பகுதி மக்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து,  அங்கு சென்று மேற்படி 5 பேரையும்  கைதுசெய்ததாகவும்  ஏனையோர் தப்பியோடியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .