2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஐயன்கோவிலடி கிராம பாலம் புனரமைக்கப்படும்

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முரசுமோட்டை ஐயன்கோவிலடி கிராமத்துக்கான பிரதான வீதியான கண்டி வீதியில், தூர்ந்த நிலையில் காணப்படும் மரப்பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கண்டாவளை பிரதேச செயலர் ரி.முகுந்தன் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

மேற்படி பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியூடாக பிரயாணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில் 27 வரையான குடும்பங்கள் வசித்து வருவதுடன், அவர்களுக்கு பிரதான வீதியாக இந்த வீதியே காணப்படுகின்றது.  அவர்களது போக்குவரத்துக்கு இந்த சேதமடைந்த பாலம் பெரும் இடையூறாக காணப்படுகின்றது.

தற்போது பருவமழை ஆரம்பித்துள்ளமையால், பாலம் மேலும் சேதமடைகின்றது.

இந்நிலையில், மேற்படி பாலத்தை புனரமைத்து தருமாறு இக்கிராம மக்களும் முரசுமோட்டை பிரதேச பொது அமைப்புக்களும்; கண்டாவளை பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாலம் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை விரைந்து ஆரம்பிப்பதற்கு ஆவன செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .