2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மொய்ப்பணத்தை திருடிய சிறுவர்கள் தடுத்துவைப்பு

George   / 2014 நவம்பர் 03 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். நாவாந்துறை பகுதியில் திருமண வீடொன்றில் மொய்ப்பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களையும் அச்சுவேலி அரச சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கும்படி யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.
 
இது தொடர்பாக தெரியவருவதாவது,
 
நாவாந்துறையில் திருமண வைபவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. திருமணத்தின் போது உறவினர்கள், நண்பர் கொடுத்த மொய்ப்பணங்களை திருமணம் நடத்திய வீட்டுக்காரர்கள் வீட்டிலுள்ள ஒரு இடத்தில் வைத்துள்ளனர்.
 
திருமண வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வந்த மூன்று சிறுவர்கள், அந்த மொய்ப்பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
 
மொய்ப்பணம் திருட்டுப்போனது தொடர்பில் திருமண வீட்டில் இருந்தவர்கள் தேடிகொண்டிருந்தபோது, இந்த மூன்று சிறுவர்களும் சாப்பிடுவதற்காக மீண்டும் திருமண வீட்டிற்கு வந்துள்ளனர்.
 
அறிமுகமில்லாத இந்த சிறுவர்கள் மீது சந்தேகம் கொண்டு, திருமண வீட்டுக்காரர்கள் சிறுவர்களை மிரட்டிக்கேட்ட போது சிறுவர்கள் தாங்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
 
இதனையடுத்து மூன்று சிறுவர்களும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 12, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு பிடிபட்டனர்.
 
தொடர்ந்து மேற்படி மூன்று சிறுவர்களும் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (03) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
இது தொடர்பாக வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .