2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மீன்களின் விலையில் வீழ்ச்சி

George   / 2014 நவம்பர் 04 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதால் யாழிலுள்ள சந்தைகளில் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக மீன் ஏல விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
யாழிலுள்ள பண்ணை, சின்னக்கடை, நாவாந்துறை, காக்கைதீவு உள்ளிட்ட சந்தைகளி;ல் மீன்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
 
கணவாய் ஒரு கிலோ 350 – 400 ரூபாய் வரையிலும், நண்டு, கயல் மீன் ஆகியன ஒரு கிலோ 250 – 300 ரூபாய் வரையிலும், ஒட்டி வகை மீன், பாலை மீன், சீலா மீன் ஆகியன ஒரு கிலோ 200 – 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
 
எனினும் இறால் வகைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு கிலோ சிவப்பு இறால் 700 ரூபாய் ஆகவும், சின்ன இறால் ஒரு கிலோ 550 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .