2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அச்சுவேலியிலிருந்து திருகோணமலைக்கு பேருந்து சேவை நீடிப்பு

George   / 2014 நவம்பர் 04 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
தொண்டைமானாறு – திருகோணமலைக்கு செல்லும் பேருந்து சேவையை அச்சுவேலியிருந்து –திருகோணமலைக்கு நீடித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, செவ்வாய்கிழமை (04) தெரிவித்தார்.
 
இந்த பேருந்து சேவை நீடிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
 
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பேருந்து சேவை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
அந்த வகையில் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும் பேருந்து தொண்டைமானாறு, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கு சென்று தொடர்ந்து அங்கிருந்து நெல்லியடி, கொடிகாமம், வவுனியா ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது.
 
அதேபோல திருகோணமலையிலிருந்து யாழ். நோக்கி நண்பகல் 12.30 மணிக்கு இந்த பேருந்து தனது சேவையை ஆரம்பிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .