2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வயோதிப பெண் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலை, பெரியவிளானை சேர்ந்த அருளப்பு செபரத்தினம் (வயது 79) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மகன் சடலத்தை அடையாளம் காட்டியதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் நிலைய வளாகத்திலுள்ள மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மேற்படி வயோதிபப் பெண், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி வயோதிப பெண் யார் என்பது தொடர்பில் தெரியவரவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .