2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குறைந்த நிறையில் பாண் விற்பனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 05 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, மருதங்கேணி பகுதிகளிலுள்ள வெதுப்பகங்களில் 370 தொடக்கம் 400 கிராம் நிறையுடைய பாண்கள் உற்பத்தி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் புதன்கிழமை (05) தெரிவித்தார்.

யாழ். பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகளால் மருதங்கேணி மற்றும் வெற்றிலைக்கேணி பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வெதுப்பகங்களில் செவ்வாய்க்கிழமை (04) சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, வெற்றிலைக்கேணியிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 400 கிராம் பாண் உற்பத்தி செய்யப்பட்டதுடன், அந்த பாண் 50 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அத்துடன், மருதங்கேணியிலுள்ள வெதுப்பகமொன்றில் 370 கிராம் பாண் உற்பத்தி செய்யப்பட்டு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் இருவருக்கும் எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாணின் நிர்ணய அளவு 450 கிராமாக இருக்க வேண்டும் என்பதுடன் 60 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதே சட்ட நியதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .