2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 10 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்


யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், வட மாகாணத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று வேம்படிச் சந்தியில் திங்கட்கிழமை (10) நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, கடந்த மாதம் 24ஆம் திகதி காணாமற் போய் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலை மற்றும் கடந்த 27ஆம் திகதி பூம்புகார் பகுதியில் 17 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

'பாலியல் கல்வி என்பது வாழ்க்கைப்பாடம். தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோருகிறோம், என் உரிமைகளை ஏன் நீங்கள் வன்முறைப்படுத்துகிறீர்கள், பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்?' என்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .