2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குளிர்பான உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

வடமாகாண சுகாதார திணைக்களத்தால்  யாழ்.மாவட்டத்திலுள்ள 59 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட உப உணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை (10) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நூறு பேர் வரையில் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள முனியப்பர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதி வழியாக வந்து நாவலர் வீதியை அடைந்து அங்கிருந்து கஸ்தூரியார் வீதியால் வந்து அவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் நாயகம் கே.என் டக்ளஸ் தேவானந்தாவிடம் மனு ஒன்றை கையளிப்பதற்காக ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு சென்றனர். எனினும், அங்கு டக்ளஸ் தேவானந்தா இல்லாத காரணத்தால் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரனிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கே.வி.குகேந்திரன், இப்பிரச்சினைக்கு தீர்வைப்பெற்றுத் தர உரிய தரப்பினரிடம் பேசி ஆவன செய்வதாக ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் நாயகம் கே.என் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் தெரிவித்ததாக கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .