2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்கரையிலிருந்து மீனவர் ஒருவருடைய சடலம் செவ்வாய்க்கிழமை (11) காலை கரையொதுங்கியுள்ளதாக நயினாதீவு உப பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
நயினாதீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (வயது 50) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (10) பகல் வேளையில் கட்டுமரத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மேற்படி மீனவர், இரவாகியும் கரை திரும்பவில்லை. இதனையடுத்து, இவரது மனைவி நயினாதீவு உபபொலிஸ் நிலையத்தில் மீனவரை காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்நிலையில், கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, அவரது சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

அவ்விடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா, சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .