2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டி பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற ஒரு பெண் உட்பட மூவர் செவ்வாய்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த பெண் மின்மாற்றியில் கம்பியை இணைத்து மின்மாற்றியின் வேகத்தை குறைத்த குற்றச்சாட்டிலும், உடுப்பிட்டியை சேர்ந்த இருவர் திருட்டு மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .