2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறுமி துஸ்பிரயோகம்; மூவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றில் வைத்து 13 வயது சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு ஆண்கும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் யுவதியொருவரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் கறுப்பையா ஜீவராணி புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் கடந்த 2ஆம் திகதி, யாழ்.நகரிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அச்சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுமியை எங்கு தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாததை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சிறுமி கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டமை தெரியவந்தது. இதனையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (11) வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன், அங்கிருந்த 23, 25 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 21 வயதுடைய யுவதியையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று, குறித்த வீட்டில் வைத்து இரண்டு சந்தேகநபர்களும் பாலியல் துஸ்பிரயோகம்  செய்தமை தெரியவந்தது. இதற்கு அந்த வீட்டில் இருந்த யுவதியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, மூன்று சந்தேகநபர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்த நீதவான், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அடுத்த வழக்கு தவணையில் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .