2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போதையில் குழப்பம் விளைவித்தவருக்கு விநோத தண்டனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் மதுபோதையில் வீதியால் சென்று வருபவர்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒருவரை, நீதிமன்ற வளாகத்தில் சமூதாய வேலையுடன் கூடிய சமூதாய சீர்திருத்த பணியை 150 மணித்தியாலங்கள் மேற்கொள்ளுமாறு மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு, இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், 20 நாட்களுக்குள் 150 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட்ட நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .