2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேர்தல் காலங்களில் இழுவைப் படகுகளுக்கு அனுமதி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

தேர்தல் காலங்களில் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கு அனுமதிப்பதும் பின்னர் தடை விதிப்பதும் வாடிக்கையாகி போய்விட்டதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

இழுவைப் படகுகள் இலங்கை மீன்பிடியில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதும் இன்று வரை மீனவர்கள் இந்த படகுகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்பொழுது பருத்தித்துறை கடற்பகுதியில் இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன், மன்னார் - பேசாலை ஆகிய பகுதிகளிலும் இம்முறை மீன்பிடிகள் அதிகம் இடம்பெறுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

இழுவைப் படகுகள் மூலம் கடல்வளம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. கடற்றொழில் திணைக்களம் உடனடியாக சரியான நடவடிக்கை எடுத்து இம்முறை மீன்பிடியை முற்றாக தடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் வாக்குகளை பெறும் நோக்கில் தேர்தல் காலங்களில் இம்மீன்பிடி முறைகளை அனுமதித்தும் பின்னர் தடைசெய்தும் வருகிறார்கள். இந்நிலையை தடுக்க வேண்டும்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக கண்காணிக்கின்ற அதே வேளை உள்ளூர் மீனவர்களின் அத்துமீறல்களையும் கண்டுகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .