2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முறுகண்டி கச்சானுக்கு நிகரான கச்சான் கன்றுகள் யாழில் பரிசோதனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

முறுகண்டி கச்சானுக்கு நிகரான கச்சான் கன்றுகள் திருநெல்வேலி ஆராய்ச்;சி நிலையத்தினால் யாழ்ப்பாண சூழலுக்கு பொருத்தமானதா என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்துவதற்காக நேற்று விதைக்கப்பட்டன என திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

முறுகண்டிக்கச்சானுக்கு நிகரான சுவைகொண்டதாகவும் அதிக விளைச்சல் கொண்டதும், 3 மாதத்தில் அறுவடை செய்யக்கூடியதுமான கச்சான் கன்றுகளை உற்பத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

TIKIRI, INDI ஆகிய கச்சான் இனங்கள் ஏற்கனவே தரமானது என ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதுபோல வேறு இனங்களை உற்பத்தி செய்து சிறந்தது என தீர்மானிக்கப்பட்டு பயனாளிகளுக்கு விதைகளை வழங்குவதற்காகவே இந்தப்பரிசோதனை விதை நாட்டல் மேற்கொள்ளப்பட்டது.

இது போன்ற பரிசோதனைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடத்தப்படுவதோடு இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .