2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தங்கூசி வலைகள் மீட்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

தடை செய்யப்பட்டுள்ள 10 தொகுதி தங்கூசி வலைகள், கடற்றொழில் நீரியல்வளத் துறையினரால் புதன்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப்பகுதியில் புதன்கிழமை (12) மாலை தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக அறிந்து கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டன.

5 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த இந்த வலைகளை யாரும் உரிமை கோராத நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .