2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிறையிலிருந்து தப்பியவருக்கு மீண்டும் தண்டனை

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். சிறைசாலையிலிருந்து தப்பி சென்ற கைதியொருவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, முன்பு வழங்கப்பட்டடிருந்த 17 மாதகால சிறை தண்டனையை மீண்டும் அமுல்ப்படுத்தி யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாபரிப்பு பணம் கட்டத்தவறிய வழக்கில், மேற்படி நபருக்கு 2013 நவம்பர் மாதம், 17 மாதகால சிறைத்தண்டனை மல்லாகம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு  யாழ். சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டடார்.

இதனையடுத்து, கைதிகளை சிரமதான பணிகள் மேற்கொள்வதற்காக வெளியில் அழைத்து சென்ற போது, மேற்படி கைதி சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து, குறித்த கைதி தலைமறைவாகி வாழ்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (11) குறித்த கைதி, யாழ். நகர பகுதியில் நடமாடி திரிந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறைக்காவலர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த கைதியை கைது செய்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த கைதியை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .