2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ் - கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

இந்த மேலதிக ரயில் சேவையானது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளிலும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். 

கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.40 மணிக்கு ஆரம்பமாகும் இநடத ரயில் சேவை, மாலை 5.30 மணிக்கு கொழும்பை அடையும்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான சேவை, நாளை வெள்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பிக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவை ஞாயிற்றுக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கும் என புகையிரத நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Dineshan Friday, 14 November 2014 02:21 AM

    யாழ்ப்பாணத்திலிருந்து இரவு 8:40 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ரயில் சேவை மறுநாள் காலை 5:30 மணிக்கு கொழும்பை அடையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .