2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிகரெட் இல்லையென கடைக்காரருடன் சண்டையிட்ட இருவர் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தைக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் இல்லையென கடைக்காரருடன் முரண்பட்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி கடைக்கு இன்று நண்பகல் சென்ற இளைஞர்கள் இருவர், கடைக்காரரிடம் சிகரட் இருக்கின்றதா? எனக் கேட்டுள்ளனர். இதன்போது, கடைக்காரர் தான் சிகரட் விற்பதில்லையென கூறியுள்ளார்.

இதனையடுத்து கோபமடைந்த அவர்கள் இருவரும், கடைக்காரருடன் முரண்பட்டு, 'சிகரட் இல்லாமல் ஏன் கடை நடத்துகின்றாய்' எனக் கேட்டு, கடைக்காரருடன் சண்டையிட்டுள்ளனர்.

தொடர்ந்து, வீதியால் சென்று வருபவர்களுடனும் சண்டையிட்டுள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அவ்விடத்துக்கு சென்று இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி மற்றும் நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களும் மது போதையிலேயே இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .