2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சுற்றுலா சென்றவர்களது வீட்டில் கொள்ளை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்ற யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குடும்பமொன்றின் வீட்டிலிருந்த 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (13), பொலிஸில்  முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

வீட்டிலிருந்தவர்கள் கடந்த வாரம் தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்நுழைந்துள்ள திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

தொடர்;ந்து, வீட்டுக்காரர்கள் சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வியாழக்கிழமை (13) திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் திருட்டுப்போன விடயம் தெரியவந்தது. இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .