2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிவகாமி சுந்தரியிடம் கொள்ளை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, அரசடி சிவகாம சுந்தரி அம்மன் ஆலயத்திற்குள் வியாழக்கிழமை (13) இரவு நுழைந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மழை பெய்துகொண்டிருந்த தருணம், ஆலயத்தின் பின்கதவை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த பித்தளை குத்துவிளக்குகள், பித்தளை பொருட்கள் மற்றும் ஒலி பெருக்கிச் சாதனங்கள் என்பவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (14) காலையில் ஆலயத்துக்குச் சென்றவர்களே, ஆலயப் பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்பதை ஆலய நிர்வாக சபையினருக்கு அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து, ஆலய நிர்வாக சபையினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .